வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 29 ஜூலை 2017 (13:49 IST)

துப்பாக்கி முனையில் என் தலை சிதறினாலும்; வந்தே மாதரம் பாட மாட்டேன்: அரசியல் தலைவர் சர்ச்சை கருத்து!!

‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயமாக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மஜ்லிஸ் கட்சி எம்எல்ஏ சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.


 
 
தமிழக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது ‘வந்தே மாதரம்’ பாடலை பாட வேண்டும் என சமீபத்தில் உத்தரவு பிறபிக்கப்பட்டது. 
 
இந்த உத்தரவை போன்று மகாராஷ்டிராவிலும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பாஜக தலைவர் கோரிக்கை வைத்தார். 
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மஜ்லிஸ் கட்சி எம்எல்ஏ வரீஸ் பதான் சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, ‘‘நான் ‘வந்தே மாதரம்’ பாடலை பாட மாட்டேன். என்னுடைய மதமும், சட்டமும் இவற்றை பாட என்னை அனுமதிக்காது. என் தலையில் துப்பாக்கியை வைத்தாலும், நான் அதை பாட மாட்டேன் என தெரிவித்துள்ளார். 
 
இவரை போல சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ-களும் வந்தே மாதரம் பாடலை பாட மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.