வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2020 (13:53 IST)

வீட்டுக்குள்ள இருங்க மக்களே! – நடுரோட்டில் பாட்டு பாடும் போலீஸ்!

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களை வீட்டுக்குள் இருக்க செய்ய போலீஸார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தொடர்ந்து வெளியே சுற்றிக் கொண்டே இருக்கின்றனர். காவலர்கள் கை எடுத்து கும்பிடுவது முதற்கொண்டு தடியடி நடத்துவது வரை பல்வேறு நடைமுறைகளை பயன்படுத்தி மக்கள் கூட்டத்தை விலக்கி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியை சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர் நடுரோட்டில் விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடி மக்களிடம் வீட்டுக்குள் இருக்க சொல்லி அறிவுறுத்தும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது. இதை ஷேர் செய்துள்ள பலரும் அனைவரும் தயவுசெய்து வீட்டில் இருந்து நாட்டுக்கு உதவுங்கள் என கருத்து தெரிவித்துள்ளனர்.