துர்கா தேவியின் ஆசிர்வாதம் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கும்! – பிரதமரின் ஆயுதபூஜை வாழ்த்து!

Prasanth Karthick| Last Modified வியாழன், 14 அக்டோபர் 2021 (09:49 IST)
இன்று நாடு முழுவதும் துர்கா பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று நாடு முழுவதும் துர்கா பூஜை மற்றும் ஆயுத பூஜை மக்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளை சுத்தம் செய்து பூஜைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டு மக்களுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி ” ‘நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை வாழ்த்துகள். அநீதியை அழித்ததன் அடையாளம், துர்கா. பெண் சக்தியின் கடவுள் வடிவம். தேச கட்டுமானத்தில் பெண்கள் அதிக மரியாதையும், சம பங்களிப்பும் பெறக்கூடிய சமுதாயத்தை உருவாக்க நாம் உறுதி ஏற்போம்” என்று கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :