வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: புதன், 23 செப்டம்பர் 2015 (06:34 IST)

அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குகிறது இந்தியா

அமெரிக்காவிடம் இருந்து 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.



பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இந்த ஒப்பந்தப்படி அமெரிக்கா இந்தியாவுக்கு 22 அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிக எடைகளை சுமந்து செல்லும் 15 சினாக் ரக ஹெலிகாப்டர்களை வழங்கவுள்ளது.



இந்த ஹெலிகாப்டர்களின் வரவால் இந்திய ராணுவத்தில் உள்ள சோவியத் ஹெலிகாப்டர்கள் படிப்படியாக நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்காக இந்திய அரசு அமெரிக்காவுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாயை வழங்கவுள்ளது.