திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2024 (10:33 IST)

கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது: எக்ஸ் தளத்தில் மோடி

Modi
கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது என எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி  பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
 
கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. கச்சத்தீவு - புதிய தரவுகள் திமுகவின் இரட்டை நிலைப்பாடு என்ற முகத்திரையை கிழித்துள்ளது. திமுகவும், காங்கிரசும் தங்கள் குடும்ப நலனை பற்றி மட்டுமே எண்ணுகின்றன.
 
கச்சத்தீவு விவகாரத்தில், காங்கிரஸ், திமுக காட்டிய அலட்சியத்தால் ஏழை மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களை பாதுகாக்க திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று பதிவு செய்துள்ளார்.
 
பிரதமர் மோடியின் இந்த பதிவு காரணமாக திமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற ஒரு பக்கம் இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அருணாச்சல பிரதேசத்தில் சீனா 2000 சதுர அடியை கைப்பற்றியது குறித்து பிரதமர் மோடி எதுவும் பேசவில்லையே என்ற பதிலடி கருத்துக்கள் பதிவாகி கொண்டிருக்கின்றன
 
Edited by Mahendran