கேரளாவில் ஆன் லைனில் ஓட்டுப்பதிவு?
கேரளாவில் ஆன் லைன் ஓட்டுப்பதிவு முறையை இடைத்தேர்தலில் அமல்படுத்த தீவிர ஆலோசனை.
கேரளாவில் ஆன் லைன் ஓட்டுப்பதிவு முறையை அமல்படுத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. முதல் கட்டமாக இடைத்தேர்தலில் சோதனை முறையில் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பின்னர் 2025 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் முழுமையாக அமல்படுத்தப்படுத்தவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த ஆன் லைன் ஓட்டுப்பதிவு முறை குஜராத் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அங்கு இது வெற்றி பெறவில்லை. மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் ஓட்டுகள் பதிவானது. இதையடுத்து கடந்த 2020 ஆண்டு ஆன் லைன் ஓட்டுப்பதிவு முறை முழுமையாக நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.