1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 2 மே 2022 (14:23 IST)

கடும் வெப்பம் எதிரொலி: அனைத்து மாநில முதல்வர்களுடன் அவசர ஆலோசனை!

heat
நாடு முழுவதும் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் அவசர ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
 
 பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் பி கே மிஸ்ரா இன்று மாலை அனைத்து மாநில முதல்வர்களுடன் அனைத்து யூனியன் பிரதேச முதல்வர்களுடன் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார்
 
 நாடு முழுவதும் கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்று வீசி வரும் நிலையில் அனைத்து மாநிலங்களும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது