1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 30 நவம்பர் 2016 (18:48 IST)

பெட்ரோல் விலை உயர்வு ; டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை 13 காசுகள் உயர்த்தப்பட்டும், டீசல் விலை 12 காசுகள் குறைக்கப்பட்டும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


 

 
பெட்ரோல், டீசல் விலைகளை சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகிய நிலவரங்களுக்கு ஏற்ப நிர்ணயிக்கும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  
 
இதைத் தொடர்ந்து மாதந்தோறும் 1 மற்றும் 16 ஆம் தேதிகளில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. 
 
அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்த்தியும், டீசல் விலை லிட்டருக்கு 12 காசுகளும் குறைக்கப்பட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.