பெற்ற மகளை விபச்சாரத்திற்கு அனுப்பிய பெற்றோர்கள்: அதிர்ச்சி தகவல்கள்!
மும்பையில் ஒரு பொற்றோர்கள் 23 வயதான தாங்கள் மகளை பணத்திற்காக விபச்சாரத்தில் தள்ளியுள்ளனர். இதனால் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
பெற்றோரே தங்கள் மகளை விபச்சாரத்திற்கு அனுப்பியது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து விசாரிப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த பெற்றோர்கள் தங்கள் மகள் 14 வயதில் இருக்கும் போதே நட்சத்திர ஹோட்டலில் நடனமாட வைத்துள்ளனர். மேலும் 10 ஆண்டுகளாக அந்த பெண்ணை அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
பணக்காரர்களின் பாலியல் தேவைக்காக அந்த பெண்ணை அடிக்கடி போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு கூட அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இப்படி பெற்றோரே தன்னை பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பதால் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி பியூட்டீசியன் படித்து வருகிறார்.