Last Updated : திங்கள், 13 பிப்ரவரி 2017 (18:12 IST)
சு.சுவாமியின் ஆட்டத்தை அடக்க சட்ட பஞ்சாயத் அதிரடி செக்!!
சசிகலாவை முதல்வராக்க துடிக்கும் சுப்பிரமணியன் சுவாமிக்கு செக் வைக்கும் வகையில் களம் இறங்கியுள்ளது சட்டப் பஞ்சாயத்து இயக்கம்.
சசிகலாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துப் பேசி வரும் சு.சுவாமி அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், இன்றைக்குள் ஆளுநர் தனது முடிவை அறிவிக்காவிட்டால் வழக்குத் தொடரப்படும் என கூறினார்.
இந்நிலையில், சு.சுவாமியின் ஆட்டத்தை அடக்க சட்டப் பஞ்சாயத்து களம் இறங்கியுள்ளது. சசிகலாவை முதல்வராக்க சுப்பிரமணியம் சாமி துடிக்கிறார், நாளைக்குள் முதல்வரை முடிவு செய்யாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.
அப்படி வழக்குத் தொடுத்தால் உச்சநீதிமன்றத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பாக "கேவியட்" மனுவை தாக்கல் செய்யப்படும் அறிவித்துள்ளது.
கேவியட் மனு தாக்கல் செய்தால், சட்ட பஞ்சாயத்து கருத்தையும் கேட்டுவிட்டுத்தான் நீதிபதிகள் சு.சுவ்ச்ச்மியின் வழக்கு மீது தீர்ப்பு கொடுக்க முடியும். இதனால் சு.சுவாமியின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது.