1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 21 ஜூலை 2022 (13:05 IST)

எல்லையில் பதற்றம்! நுபுர் சர்மாவை கொல்ல ஊடுருவிய பாக். இளைஞர்

பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவைக் கொல்ல பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய ஒருவர் இந்தியா வந்துள்ளார்.
 
ஆம், ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே 24 வயதான பாகிஸ்தானியர் ஒருவர் சமீபத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். அந்த நபர் ரிஸ்வான் அஷ்ரப் என அடையாளம் காணப்பட்டார். அந்த நபர் இந்து மல்கோட் செக்டாரில் உள்ள காகான் சோதனைச் சாவடியில் இருந்து நாட்டு எல்லைக்குள் நுழைய முயன்றதாகவும் கூறப்பட்டது.  
 
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் மண்டி பஹவுதீனில் வசிக்கும் அஷ்ரஃப் பற்றிய அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அஷ்ரஃப் இந்தியாவுக்குள் நுழைந்ததன் பின்னணியில் உள்ள நோக்கம் மிகவும் ஆபத்தானதாக் இருந்தது. ஊடக அறிக்கையின் படி, இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக தலைவர் நுபுர் சர்மாவை கொல்ல எல்லைக்குள் ஊடுருவியதாக தெரிய வந்துள்ளது. 
 
நபிகள் நாயகம் குறித்து நூபுர் ஷர்மா கூறியது அஷ்ரஃப் மனதை புண்படுத்தியதால் இந்தியாவிற்குள் நுழைந்து நுபுர் சர்மாவை கொல்ல திட்டம் தீட்டினார். 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ள அஷ்ரப்புக்கு உருது, பஞ்சாபி, ஹிந்தி ஆகிய மொழிகள் தெரியும். ஆனால், அவரிடம் இருந்து ஆயுதங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தற்போது எல்லைப் பாதுகாப்புப் படையினர்தொடர்ந்து அஷ்ரப்புடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.