1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2023 (13:21 IST)

பெண்கள் இலவச பயணத்திற்கு எதிர்ப்பு; ஆட்டோ, கேப், தனியார் வாகனங்கள் வேலை நிறுத்தம்!

Strike
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கும் கர்நாடக அரசின் “சக்தி” திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் ஆட்டோ, கேப் வாகனங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.



கர்நாடகாவில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தை போல கர்நாடகாவிலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட நிலையில் பெண்கள் பலரும் அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்கின்றனர்.

இதனால் ஆட்டோ, கேப் ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் கேள்விக்கு உள்ளாகியுள்ளதாக தெரிகிறது. இதனால் இலவச பயணம் வழங்கும் “சக்தி” திட்டத்தை அரசு திரும்ப பெற வேண்டும் என கர்நாடக தனியார் வாகன உரிமையாளர்கள், ஆட்டோ, கேப் ஓட்டுனர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பான அரசுடனான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவுகள் இன்னும் எட்டப்படாத நிலையில் இன்று தனியார் வாடகை வாகன நிறுவனங்கள், ஆட்டோ, கேப் ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் கர்நாடகாவின் முக்கிய பகுதிகளில் தனியார் கேப், ஆட்டோ போக்குவரத்து குறைந்துள்ளது. போக்குவரத்திற்கு முழுவதுமாக பேருந்துகளை மக்கள் நாடுவதால் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Edit by Prasanth.K