1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (08:28 IST)

டெல்லியில் ஆன்லைன் உணவுப் பொருள் விநியோகத்திற்குத் தடை.. அதிரடி உத்தரவு..!

டெல்லியில் ஆன்லைன் மூலம் உணவுப் பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
டெல்லியில் ஜி20 மாநாடு நடப்பதை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி போலீசார் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு ஆன்லைன் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது தடை செய்யப்பட்டிருப்பதாகவும் மாநாடு நடக்கும் நாட்களில் மருந்துகள் டெலிவரி மட்டும் விதிவிலக்கு என்றும் மற்ற எந்த பொருளும் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்ய கூடாது என்றும்  டெல்லி காவல்துறையின் சிறப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.  
 
ஆனால் அதே நேரத்தில் தபால் மற்றும் மருத்துவ சேவைகள், அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்றும்  உலக தலைவர்கள் வருகை தருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இதுபோன்ற நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார் மட்டுமில்லை
 
Edited by Siva