வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 31 ஜூலை 2022 (11:06 IST)

குரங்கு அம்மை நோய்: கேரளாவில் ஒருவர் உயிரிழப்பு!

dead
கேரளாவில் குரங்கு அம்மை நோய்க்கு ஒருவர் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்தியாவில் கேரளா மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் குரங்கு அம்மை நோய் ஒரு சிலருக்கு பரவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கேரளாவில் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து குருவாயூர் பகுதியை சேர்ந்த 22 வயது நபர் ஒருவர் குரங்கு அம்மை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் இவர் கடந்த 27ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கேரள அரசு தெரிவித்தது 
 
இந்த நிலையில் இறந்த இளைஞரின் மாதிரிகள் வைராலஜி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த சோதனை முடிவு வந்த பின்னரே அவர் குரங்கு அம்மை நோயால் பாதிப்பு இருந்ததா என்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது