வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 8 ஜனவரி 2022 (11:47 IST)

ஒமைக்ரான் பிப்ரவரியில் உச்சத்தை எட்டும் - தினசரி பாதிப்பு 5 லட்சமாக உயரும்!

ஒமைக்ரான் பிப்ரவரியில் உச்சத்தை எட்டும் - தினசரி பாதிப்பு 5 லட்சமாக உயரும்!
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு பிப்ரவரியில் உச்சத்தை எட்டும் என அமெரிக்க மருத்துவ நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்தியாவில் 27 மாநிலங்களில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த ஒமிக்ரான் பாதிப்புகள் 3,071 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தை எட்டும் என அமெரிக்க மருத்துவ நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 
 
இந்தியாவில் கடந்த ஆண்டு டெல்டா வைரஸ் அலையின் தாக்கத்தை விட ஒமிக்ரான் பரவால் அதிகம் பேர் பாதிக்கப்படுவார்கள். ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை  அடுத்த மாதம் சுமார் ஐந்து லட்சம் வரை உயரக்கூடும். ஒமிக்ரான் வைரஸ் வீரியம் குறைவானது. இதனால் இறப்புகள் மிக குறைவாக இருக்கும். நோய் தொற்று உள்ளவர்களில்  85% பேருக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது என தெரிவித்துள்ளார்.