முத்திரை பதித்த மூதாட்டி - 8 ஆயிரம் மரங்களை வளர்த்து சாதனை
ஒன்று அல்ல இரண்டு அல்ல 8000 மரங்களை வளர்த்த 105 வயது மூதாட்டியை பிபிசி நிறுவனம் கௌரவப்படுத்தி உள்ளது.
80 ஆண்டுகளில் 8000 ஆலமரங்களை நட்டு அதை தன் பிள்ளைகள் போல் வளர்த்து வருபவர் ‘சாலு மரத’ திம்மக்கா, இவர் பெங்களூருவை அடுத்த, கூதூர் கிராமத்தை சேர்ந்தவர். தங்கள் கிராமத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை பொட்டல் காடாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஊரை பசுமையாக்க, தனி ஆளாக தனது கணவருடன் சேர்ந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆலமரக் கண்றுகளை நட்டு வைத்து, அதனை வளர்த்து வந்துள்ளார். அவரின் விடா முயற்சி ஊர் மக்கள் இழைப்பாறா மனதை மயக்கும் சோலையாக படர்ந்துள்ளது. திம்மக்காவின் முயற்சியை பாராட்டி குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர்கள் என பல்வேறு தரப்பினர் விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளனர்.
ஆண்டு தோறும் உலக அளவில் சிறந்த பெண்மணியாக, 100 பேரை பி.பி.சி.,தேர்வு செய்து, அவர்களை கவுரவப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், திம்மக்காவை
2016ம் ஆண்டிற்கான சிறந்த பெண்மணியாக பிபிசி தேர்வு செய்துள்ளது. தள்ளாடும் வயதிலும், தளராமல் உழைத்து மரங்களை காத்த திம்மக்காவை நாடு போற்றுகிறது நாமும் போற்றுவோம்...