வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2016 (16:21 IST)

இனி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை எங்கு பயன்படுத்தலாம்?

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட கட்டணங்களைச் செலுத்துவதற்கான காலக்கெடுவை, டிசம்பர் 15ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.


 

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”500, 1000 ரூபாய் நோட்டுக்களை வியாழக்கிழமை நள்ளிரவுக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும். நள்ளிரவுக்கு மேல் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது நள்ளிரவுக்கு மேல் பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றுவது நிறுத்தப்படும்.

குடிநீர்க் கட்டணம், மின் கட்டணம் செலுத்த பழைய ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 15 வரை பயன்படுத்தலாம். பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர்களையும் பழைய ரூபாய் நோட்டுக்கள் மூலம் பெறலாம்.

500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யத் தடை இல்லை. மத்திய, மாநில அரசு பள்ளி, கல்லூரிகளில் ரூ. 2000 வரை பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம்” என்று கூறப்பட்டுள்ளது.