1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 ஜனவரி 2023 (17:06 IST)

200 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கிய ஓலா நிறுவனம்: அதிர்ச்சி தகவல்

Ola Uber
உலகின் பல முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் ஓலா நிறுவனம் 200 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில மாதங்களாக பண வீக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கையை இந்திய நிறுவனங்கள் உள்பட பல சர்வதேச நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. 
 
இந்த நிலையில் பெங்களூர் நகரை சேர்ந்த ஓலா நிறுவனம் 200க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
ஓலா நிறுவனத்தை மறு கட்டமைப்பு செய்ய இருப்பதாகவும் நிறுவனத்தின் நஷ்டத்தை தவிர்க்கவும் லாபத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது
 
இதன் காரணமாக ஓலா நிறுவனத்தில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran