வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : சனி, 17 மே 2014 (14:49 IST)

இந்தியாவின் பிரதமராகவுள்ள மோடிக்கு ஒபாமா வாழ்த்து

16 ஆவது நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றதையடுத்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்பது உறுதியாகிவிட்ட நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா, மோடிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இந்த தொலைபேசி உரையாடலின்போது, உலக பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா ஆற்றவுள்ள பங்களிப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிகிறது.
 
உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் வாக்காளர்கள் வழங்கியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புக்கு பாராட்டு தெரிவித்த ஒபாமா, சர்வதேச அரங்கில் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.