வியாழன், 13 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2016 (15:48 IST)

மானிய சிலிண்டர் விலை உயர்வு : பொதுமக்கள் அதிர்ச்சி

மானிய விலையில் அரசு வழங்கும் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், மானியமல்லாத சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.


 

 
அரசு மானியத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு குடும்பத்திற்கு 12 எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் தேவைப்படுபவர்கள் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும்.
 
இந்நிலையில் மானிய விலையில் அரசு வழங்கும் எரியாவு சிலிண்டரின் விலையை ரூ.1.98 உயர்த்தியும், வெளிச்சந்தையில் கிடைக்கும் இண்டேன் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.11 உயர்த்தியும் எண்ணெய் நிறுவங்கள் அறிவித்துள்ளன.
 
இந்த விலை மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தது. இதையடுத்து, சென்னையில் வெளிச்சந்தை சிலிண்டரின் விலை ரூ. 550.50 ஆகவும், மானில விலை சிலிண்டரின் விலை ரூ.408.66 ஆகவும் இருக்கும்.