செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 25 பிப்ரவரி 2023 (14:06 IST)

பிளிப்கார்ட் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கட்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

flipkart
பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணிபுரியும் 30 சதவீத ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை காரணமாக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்தியாவில் உள்ள சில நிறுவனங்களும் வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் பிரபல இகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 30 சதவீத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை என அறிவித்துள்ளது. 
 
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கு ஊதிய உயர்வு இல்லை என்றும் உள்ள 70% ஊழியர்களுக்கு மட்டும் மார்ச் மாதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் பிலிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
இதனால் பிளிப்கார்ட்  நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran