Last Updated : புதன், 21 டிசம்பர் 2016 (16:51 IST)
ரூ.5000 மேல் டெபாசிட் செய்ய விதிகள் தளர்வு: ரிசர்வ் வங்கி அதிரடி
வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்ய சில விதிமுறைகளை நேற்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதையடுத்து இன்று அந்த விதிகளை தளர்த்தியது.
வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் வரும் டிசம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் ஒரே ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என்றும், அதற்கு வங்கியில் சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மத்திய ரிசர்வ் வங்கி நேற்று புதிய கட்டுபாடு ஒன்றை அறிவித்தது.
இதையடுத்து இன்று அந்த விதிகள் தளர்த்தப்பட்டதாக அறிவித்துள்ளது. அதுவும் குறிபிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. உங்கள் வாடிக்கையாளரை அறிந்து இருங்கள்(KYC), இதனை பூர்த்தி செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த விதிகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி இந்த KYC பூர்த்தி செய்த வாடிக்கையாளர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துக்கொள்ளலாம்.