1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 9 ஜனவரி 2022 (15:01 IST)

மாஸ்க் அணீந்தால் லாக் டவுன் தேவையில்லை - கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். 

 
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. நாட்டில் பாதிப்பு அதிகம் காணப்படும் 2வது மாநிலமாக டெல்லி உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தொற்று பரவலால் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என்று டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
 
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, தொற்று அதிகரித்து வருகின்றன, ஆனால் பயப்பட தேவையில்லை. இந்த முறை, தினசரி இறப்புகள் இரண்டாவது கொரோன  அலையை விட ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. 
 
நாங்கள் லாக்டவுன் கொண்டு வர விரும்பவில்லை. நீங்கள் முக கவசம் அணிந்தால் நாங்கள் லாக்டவுன் கொண்டு வர மாட்டோம். லாக்டவுனைப் பற்றி இப்போதைக்கு எந்த நோக்கமும் இல்லை என கூறினார்.