வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 21 ஜனவரி 2019 (06:46 IST)

இரவு 8 மணிக்கு மேல் மதுவிற்பனை கிடையாது! முதல்வர் அதிரடியால் குடிமகன்கள் அதிர்ச்சி

இரவு 10 மணி வரை மதுவிற்பனை நடப்பதால் நள்ளிரவு வரை குற்றச்செயல்கள் அதிகரிப்பதாக புகார்கள் அதிகம் வந்த நிலையில் இனி இரவு 8 மணிக்கு மேல் மதுவிற்பனை கிடையாது என ராஜஸ்தான் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அம்மாநில குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இரவு 8 மணிக்கு மேல் மதுவிற்பனையை நிறுத்துவது குறித்த ஆலோசனையில் நேற்று அதிகாரிகளுடன் ஈடுபட்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆலோசனைக்கு பின், மாநிலம் முழுவதும் இரவு 8 மணிக்கு மேல் மது விற்பனைக் கூடாது என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அரசின் இந்த உத்தரவை மீறி 8 மணிக்கு மேல் மது விற்பனை செய்தால் மதுக்கடைகள் மற்றும் பார்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அதன் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே கடந்த 2008ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின் அந்த உத்தரவு நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் போலிமது விற்பனை, சட்டத்துக்கு புறம்பான மது விற்பனை, நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு மது விற்பனை போன்ற குற்றச்சாட்டு வந்தால் கடுமையான சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.