செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (11:04 IST)

இந்தியாவில் புதிய வகை கொரோனா: உலக சுகாதார மையம் தகவல்!

omicron
இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகின்றது என்பதும் இன்று நாடு முழுவதும் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸின் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது 
 
இந்தியாவில் BA.2.75 என்ற புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்
அதன் தாக்கம் குறித்து இனிமேல் தான் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.