திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By bala
Last Modified: சனி, 18 மார்ச் 2017 (11:43 IST)

புதிய திரைப்படத்தை திரையரங்கிலிருந்து பேஸ்புக்கில் லைவ் கொடுத்த மர்ம ஆசாமி

புதிய திரைப்படம் ஒன்றை திரையரங்கிலிருந்தபடியே பேஸ்புக்கில் லைவ் கொடுத்த ஆசாமியை போலீஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.



அங்கமலி டைரீஸ் என்ற மலையாள படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. மலையாள நடிகர் விஜய் பாபு  இந்த படத்தை தயாரித்து நடித்துள்ளார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இந்த படத்தை ரிலீஸ் ஆன அன்றைய தினமே மர்ம நபர் ஒருவர் திரையரங்கில் இருந்தபடியே பேஸ்புக் பக்கத்தில் லைவ் செய்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நடிகர் விஜய் பாபு இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரை அடுத்து மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து நடிகர் விஜய்பாபு கூறுகையில், ஒரு நபர் என் திரைப்படத்தை திரையரங்கில் இருந்தபடியே பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளான். அவன் நிச்சயம் எங்களிடம் பிடிபடுவான் என்றார்.