1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2016 (12:34 IST)

போதையில் வாகனம் ஓட்டுபவர்களை தடுக்க வருகிறது புதிய சட்டம்

நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாவது போல், விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான விபத்துக்கள், அதிவேகமாக செல்வதாலும், மது போதையில் வண்டி ஓட்டுவதாலும் நடைபெறுகிறது.


 
 
இதனை தடுக்க சாலை போக்குவரத்துத்துறை சீர்திருத்தக்குழு மத்திய அரசுக்கு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில், இரண்டாவது முறையாக அதிவேகமாக ஓட்டும் வாகன ஓட்டிகளிடம் விதிக்கப்படும் அபராதம் ரூ. 2 ஆயிரத்திலிருந்து ரூ. 10 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.
 
குடி போதையில் வானங்களை ஓட்டுபவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் போன்ற பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.
 
மத்திய அரசு இந்த பரிந்துரைகளை ஏற்று நடைமுறை படுத்தினால் விபத்துக்கள் ஓரளவுக்கு குறையும் என எதிர்பார்க்கலாம். சமீபத்தில் தொழில் அதிபர் ஒருவரின் மகள் ஐஸ்வர்யா குடிபோதையில் கார் ஓட்டி கூலித்தொழிலாளி ஒருவரை கொன்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.