1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 9 டிசம்பர் 2021 (13:37 IST)

புதிய முப்படை தளபதி இவரா? பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலனை!

புதிய முப்படை தளபதி இவரா? பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலனை!
இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் காலமான நிலையில் புதிய முப்படை தளபதி நியமனம் செய்யும் பணியில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் புதிய முப்படை பாதுகாப்பு துறை தலைவர் பதவிக்கு ஜெனரல் நரவனே அவர்கள் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்தியாவின் முதல் முப்படை தளபதி என்ற பெருமையைப் பெற்றுள்ள பிபின் ராவத் அவர்களுக்கு இணையான ராணுவ அதிகாரி ஜெனரல் என்பதால் அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது
 
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இதுகுறித்து மற்ற ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் விரைவில் அவனை அவர்கள் முப்படை தலைமை தளபதியாக பதவி ஏற்பார் என்றும் கூறப்படுகிறது