1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2022 (23:57 IST)

நீட் நுழைவுத் தேர்வுக்கான விதிமுறைகள் - தேசிய தேர்வுமுகமை அறிவிப்பு

NEET
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக உள்ள நிலையில் நடப்பு ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு 17ம் தேதியன்று நடைபெற உள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் மொத்தம் 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து 1,42,286 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வுக்கு இன்னும் ஒருவார காலமே உள்ளதால் இன்று நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் மற்றும் தேர்வு மைய விவரங்கள் வெளியாகிறது. ஹால்டிக்கெட் மற்றும் தேர்வு மைய விவரங்கள் https://neet.nta.nic.in/ என்ற நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ தளத்தில் காலை 11.30 மணிக்கு வெளியானது.

இந்த நிலையில்,.  தேர்வுக்கான விதிமுறைகளை தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து மாணவர்களும் முககவசம் அணிந்து வர வேண்டும். ஹால் டிக்கெட்டுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஐடி கார்டு வைத்திருந்தால் மட்டுமே அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். மேலும், மாணவர்க்ளின் உடல் வெல்ல நிலையில் பரிசோதனை செய்யப்படும், அதில், வெப்பம் அதிகமாக இருந்தால், அவர்கள் தனியறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தேர்வு முடிந்தபின், தெர்வரை கண்ணாணிப்பாளரிடம் கொடுக்க வேண்டும்  மதியம் 1:3- மணிக்கு மேல் வரும் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.