1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : திங்கள், 18 ஜூலை 2016 (16:20 IST)

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் நவ்ஜோத் சிங் சித்து.


 


பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அதற்கு முன்பு, இந்த கூட்டத்தொடரில், முக்கிய மசோதக்களை நிறைவேற்ற மோடி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்தார். இந்நிலையில், பாஜாக சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவி வகித்து வந்த நவ்ஜோத் சிங் சித்து பதவி விலகி உள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைய போவதால் அப்பதவியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து அவரின் மனைவி நவ்ஜோத் கவுரும் நாடாளுமன்ற செயலாளர் பதவியை ராஜினாமா செய்து ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்து கொள்ளவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.