1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 27 மார்ச் 2017 (21:24 IST)

திருப்பதி கோவிலில் இதுதான் நடக்கின்றது. ரகசியத்தை வெளியிட்ட நேஷனல் ஜியாக்ரபி சேனல்

இந்துமத மக்களின் புனித கோவில்களில் ஒன்று திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில். உலகின் மிகப்பெரிய பணக்கார தெய்வமான இந்த கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவுபகல் பாராது வருகை தந்து சுவாமியை வழிபட்டு வருகின்றனர்.



 


இருப்பினும் இந்த கோவிலின் வரலாற்றுப் பின்னணி, ரகசியங்கள் உள்பட பல விஷயங்கள் பக்தர்களுக்கு தெரியாது. திருப்பதி வந்தோம், மொட்டை அடித்தோம், லட்டு வாங்கினோம் என்றுதான் பெரும்பாலான பக்தர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இந்த கோவில் குறித்து நேஷனல் ஜியாக்ரபி சேனல் குறும்படம் ஒன்றை எடுத்துள்ளது இந்த குறும்படம் இன்று இரவு 9 மணிக்கு முதல்முறையாகவும், அடுத்தடுத்த நாட்களில் மறு ஒளிபரப்பும் ஆகவுள்ளது.

இந்த குறும்படத்தில் இந்த கோயிலின் வரலாற்றுப் பின்னணி, சேஸாச்சாலம் வனப்பகுதி, முதன்மை கோயில், இதர கோயில்கள், பிரசாத முறைகள், மலர் அலங்காரம், ஸ்ரீவாரி சேவாக்கள், புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள், பிரமோத்சவத்தின் போது நடைபெறும் நான்கு முக்கிய வாகன சேவாக்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள்  இடம் பெற்றுள்ளன.