”நாடு பெரிய மனிதரை இழந்து புலம்புகிறது” - கலாமுக்கு சச்சின் இரங்கல்; மேலும் பல வீரர்கள் அஞ்சலி


லெனின் அகத்தியநாடன்| Last Updated: புதன், 29 ஜூலை 2015 (11:48 IST)
நாடு பெரிய மனிதரை இழந்து புலம்புகிறது என்று அப்துல் கலாம் மறைவிற்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும், மேலும் பல வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
 
முன்னாள் குடியரசு தலைவரும், அணு விஞ்ஞானியுமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், நேற்று திங்கட்கிழமை இரவு மேகாலயாவின் ஷில்லாங்கில் ஐஐஎம் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
 
இளைஞர்களின் ஆதர்ஷமாக விளங்கிய அவருக்கு நாடு முழுவதிலும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து பல தலைவர்களும், பொதுமக்களும் இரங்கல் செய்திகளும், நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
 
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அணில் கும்ப்ளே, சஞ்சய் மஞ்ரேக்கர், ஹர்பஜன் சிங், விவிஎஸ்.லெஷ்மணன், சாய்னா நெய்வால், விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் பலரும் அப்துல் கலாமின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

 
இது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது இரங்கல் செய்தியில், ”மிகப்பெரிய மனிதரை இழந்து நாடே புலம்புகிறது” என்றும், “முன்னாள் குடியரசுத் தலைவரும், புகழ்பெற்ற விஞ்ஞானியும், அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்தவரும், அற்புதமான மனிதாபிமானியுமான அப்துல் கலாம் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.
 

 
அணில் கும்ப்ளே தனது இரங்கல் குறிப்பில், “தேசத்திற்கு மிகப்பெரிய இழப்பு. நீங்கள் தேசத்தின் கோடானகோடி மக்களுக்கு ஆதர்ஷ சக்தியாக திகழ்ந்தவர். ஆழ்ந்த இரங்கல்கள்.
 

 
விவிஎஸ்.லெஷ்மணன்: அப்துல் கலாம் மிகப்பெரிய குடியரசுத் தலைவர் மட்டுமல்ல. தேசம் முழுவதிலும் உள்ள லட்சியமுள்ள பலரையும் ஈர்த்தவர். நான் சந்தித்தவர்களில் தன்னை மிகவும் சிறியவனாக கருதிக்கொண்ட மனிதர்களில் இவரும் ஒருவர். நாங்கள் அனைவரும் உங்களை இழக்கிறோம்.
 


இதில் மேலும் படிக்கவும் :