வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (07:18 IST)

வானில் தெரியும் சூப்பர் மூன்... இன்றும் நாளையும் பார்க்கலாம்: நாசா அறிவிப்பு

Full Moon Day
நிலவின் சுற்றுவட்ட பாதை குறைவாக இருக்கும் நிலையில் அதே நேரம் பௌர்ணமியாக இருந்தால் அதை ப்ளூ மூன் அல்லது நீல நிலவு என்று கூறுவார்கள். வழக்கமாக பௌர்ணமி தினத்தில் நிலவு கூடுதல் வெளிச்சத்துடன் பிரகாசமாக தெரியும் நிலையில், பூமியில் இருந்து அருகில் இருந்தால் சூப்பர் மூன் என்று கூறப்படுவதுண்டு.
 
இந்த மாத தொடக்கத்தில் நிலவு பூமியிலிருந்து 3,57,530 கிலோமீட்டர் தொலைவில் இருந்த நிலையில் அது தொடர்ந்து பூமியில் பக்கத்திலேயே உள்ளது. அதாவது 3,57,244 கிலோமீட்டர் தூரத்தில் பூமியை சுற்றி வருவதால் தற்போது பௌர்ணமி தினம் என்பதால் சூப்பர் ப்ளூ மூன் என்றும் என்ற நீல நிற முழு நிலா வானில் தெரியும் என நாசா அறிவித்துள்ள அறிவிப்பு செய்துள்ளது.
 
நேற்றே சூப்பர் ப்ளூ மூன் தெரிந்த நிலையில் பொதுமக்கள் பலரும் ரசித்து கண்ட நிலையில் இன்றும் நாளையும் இந்த சூப்பர் ப்ளூ மூனை பார்க்க முடியும் என்று நாசா அறிவித்துள்ளது.
 
வழக்கமான பௌர்ணமி நிலாவை காட்டிலும் 14% பெரியதாக ப்ளூ மூன் தெரியும் என்றும் 30 சதவீதம் கூடுதல் பிரகாசமாக இருக்கும் என்றும் இதுதான் சூப்பர் ப்ளூ மூன் சிறப்பு என்றும் நாசா தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் இன்றும் நாளையும் சூப்பர் ப்ளூ மூன் பார்த்து மகிழலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
Edited by Siva