நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நரிக்குறவர், குருவிக்காரர்கள், மலையாளி கௌண்டர்களையும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க பட்டியல் இனத்தவருக்கான சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் குழுவில், பட்டியல் இனத்தவருக்கான சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
அதில், நரிக்குறவர், குருவிக்காரர்கள், மலையாளி கௌண்டர்களையும் பழங்குடியினர் அதாவது எஸ்.டி பிரிவில் சேர்க்க வழிவகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பான மசோதா ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அந்த சமூகத்தினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற வாய்ப்பு ஏற்படும்.