1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 2 செப்டம்பர் 2017 (14:58 IST)

மோடிக்கு கேள்வி கேட்பது பிடிக்காது; பாஜக எம்.பி

கேள்விகள் கேட்பதை பிரதமர் மோடி விரும்ப மாட்டார் என பாஜக எம்.பி. நானா படோல் மோடி மீது சர்ச்சையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.


 

 
நாக்பூரில் விவசாயிகள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பாஜக எம்.பி நானா படோல் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது:- 
 
பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தின் போது ஓபிசி அமைச்சகம் மற்றும் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக நான் கேள்வி எழுப்பியதால் மோடி மிகவும் கோபட்டார். ஆத்திரம் அடைந்த மோடி என்னை அமைதியாக இருக்குமாறு என்னிடம் கோபத்துடன் கூறினார். 
 
எம்.பி.க்களை அடிக்கடி சந்திக்கிறார். ஆனால், கேள்விகள் எழுப்புவதை அவர் விரும்புவதில்லை. மோடியிடம் நீங்கள் கேள்வி எழுப்பும் போது, அவர் உங்களிடம் பாஜக சிந்தாந்தம் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்களை பற்றி அறிந்து உள்ளீர்களா?