1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 3 ஜூலை 2018 (21:50 IST)

ஆன்மா வெளியேற 11 பைப்புகள்: டெல்லி தற்கொலையில் விலகாத மர்மம்!

டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கடந்த 1 ஆம் தேதி இரவு கூட்டாக தற்கொலை செய்து கொண்டனர். இவர்களில் 7 பேர் பெண்கள். 10 பேர் தூக்கில் தொங்கியும் ஒரே ஒரு முதிய பெண் மட்டும் படுக்கையிலும் இறந்து கிடந்தனர். 
 
இந்நிலையில் போலீஸ் விசாரணையில் அந்த வீட்டில் இருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அதில் அனைவரும் சொர்க்கம் செல்ல வினோத வழிபாடு செய்ததும் வழிபாட்டிற்கு பின்னர் அனைவரும் தற்கொலை செய்து கொள்வது குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
இந்த விவகாரம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. விசாரணையில், அந்த குடும்பத்திற்கும், காடா பாபா என்கிற மந்திரவாதிக்கும் இடையே தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. 
எனவே, அவர்களை மூளைச்சலைவை செய்து அந்த சாமியார்தான் தற்கொலைக்கு தூண்டியிருப்பார் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்கையில், சம்மந்தமே இல்லால் அவர்கள் வீட்டுச் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த 11 பைப்புகள் மரணத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
4 பைப்புகள் நேரானதாகவும், 7 பைப்புகள் வளைந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 4 நேரான பைப் ஆண்களுக்காகவும், மீதமுள்ள வளைந்த 7 பைப்புகள் பெண்களுக்கும் என பலர் தெரிவிக்கின்றனர்.
 
தற்கொலை செய்து கொண்டதும் அவர்களது ஆன்மா வெளியேற இந்த பைப்புகள் பதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது போன்று அடுத்தடுத்து இந்த வழக்கில் மர்ம செயல்கள் வெளிவருவதால் போலீஸார் குழப்பத்தில் உள்ளனர்.