1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 ஜூலை 2020 (15:47 IST)

ராமர் கோவிலுக்காக 800 கிமி நடந்த இஸ்லாமியர்!

ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்துகொள்வதற்காக 800 கிமீ நடந்தே அயோத்தி சென்ற இஸ்லாமியர். 
 
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்டு 5 ஆம் தேதி அடிக்கல் நடும் விழா நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நட்டு வைக்க இருக்கிறார். 
 
இந்த விழாவில் பாஜக தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன்பகவத் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்க இருப்பதாக ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் சந்த்குரி கிராமத்தை சேர்ந்த முகம்மது பயாஸ்கான் ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்துக்கொள்ள 800 கிமி நடந்து வந்துள்ளார். இவ்வாறு அவர் கோவில்களுக்கு நடந்து செல்வது முதல்முறை அல்ல. இதோ போன்று பல கோயில்களுக்கு நடந்து சென்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.