இதயம் வெளியே தெரிந்தவாறு பிறந்த பெண் குழந்தை: மத்தியபிரதேசத்தில் ஒரு அதிசயம்
பொதுவாக மனிதன் உயிர் வாழ தேவையான முக்கிய உறுப்புகளில் ஒன்றாகிய இதயம், உடலுக்கு உள்ளே பாதுகாப்பாக இருக்கும். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு இதயம் வெளியே இருந்தது.
தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் அரவிந்த்படேலுக்கு பிறந்த இந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து இதயத்தை உள்ளே வைக்க வேண்டுமானால் 25 முதல் 30 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டதால் அதிர்சிச்யில் உறைந்தார்.
இந்நிலையில் அந்த மாவட்ட கலெக்டரை தொடர்புகொண்ட அரவிந்த்பட்டேல், தனது குழந்தையை காப்பாற்றும்படி கேட்டுக்கொண்டார். உடனடியாக கலெக்டரின் உத்தரவின்படி இதயம் வெளியே உள்ள குழந்தை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறது. மிக விரைவில் இந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.