3 வயது மகனைக் கொன்ற தாய் – அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம் !

Last Modified புதன், 22 மே 2019 (11:12 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் 3 வயது மகனைக் கொன்ற தாய் போலிஸில் பிடிபட்டவுடன் தூக்கத்தில் கொலை செய்துவிட்டதாகக் கூறியிருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் சீதாராம் மற்றும் தீபிகா குஜ்ஜர். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்துள்ள நிலையில் இப்போது 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த அவர்களுடைய மகனைக் காணாததால் அனைவரும் பதற்றமடைந்து தேடியுள்ளனர். அப்போது வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் அவரது மகனின் உடல் இறந்த நிலையில் கிடைத்துள்ளது. அதைப்பார்த்த அவரது குடும்பத்தாரும் அக்கம்பக்கத்தாரும் அழுது புலம்பியுள்ளனர்.

மர்மமான மரணம் தொடர்பாக போலீஸ் விசாரணையில் ஈடுபட்ட போது குழந்தையின் தாய் தீபிகா ஒன்றுக்கொன்று முரணாகவே பேசியுள்ளார். இதனால், தீபிகா மீது காவலர்களுக்கு சந்தேகம் வலுக்கவே தொடர்ந்து நடந்த விசாரணையில், சிறுவனை தண்ணீர்த் தொட்டியில் மூழ்கடித்ததை தீபிகா ஒப்புக்கொண்டுள்ளார். இதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.  மேலும் தூக்கத்தில் தன்னை அறியாமல் இந்த கொலையை செய்துவிட்டதாகவும் சொல்லியுள்ளார்.

இதையடுத்து தீபிகாவுக்கு மனநிலை பாதிப்பு எதாவது இருக்கிறதா என்ற சோதனையும் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் தெளிவான மனநிலையிலேயே இருப்பதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :