வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (15:14 IST)

6 ஆயிரத்தை தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு: கடும் நடவடிக்கை தேவை என அறிவுறுத்தல்..!

நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று 6000ஐ தாண்டி உள்ளதை அடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனக் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த வாரம் 1500 ஆக இருந்த கொரோன பாதிப்பு நேற்று 5 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 6,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 
 
தினமும் 1000 என்ற அளவில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் கூடுதல் நடவடிக்கை தேவை என்றும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக இது குறித்து விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran