வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 10 மார்ச் 2024 (17:19 IST)

ராகுல் காந்தியின் நடைப்பயணம் மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்: முகமது அசாருதீன்

rahul gandhi
ராகுல் காந்தியின் நடைப்பயணம் நிச்சயம் மக்களவைத் தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்

இன்று ஹைதராபாத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’தெலுங்கானா மற்றும் கர்நாடகா தேர்தலில் ஏற்பட்டதை போன்று ராகுல் காந்தியின் நடைபயணம் மக்களவை தேர்தலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் மணிப்பூர் முதல் மும்பை வரையிலான நடைபயணத்தை நாங்கள் வெற்றிகரமாக பார்க்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்
 
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எத்தனை இடங்களை பெறும் என்பதை கணிப்பது கடினம் என்றாலும் காங்கிரஸ் கண்டிப்பாக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் வெற்றியாக இது கருதப்படும் என்றும் அவர் கூறினார்

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் பெண்கள் கலந்து கொண்டனர் என்றும் ராகுல் காந்தி மிகவும் எளிமையானவர் என்றும் தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற கட்சி என்றும் அந்த கட்சி எப்போதும் வெறுப்பை பரப்பவில்லை என்றும் அமைதியை மட்டுமே பரப்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்

Edited by Siva