குஜராத் சட்டசபையில் மோடி உருக்கமான பேச்சு

ILAVARASAN| Last Updated: புதன், 21 மே 2014 (15:52 IST)
வரும் 26 ஆம் தேதி பிரதமராக பதவியேற்க்கவுள்ளதால், குஜராத் சட்டசபையிலிருந்து மோடி இன்று விடை பெற்றார்.
குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வருகிற 26 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் திறந்த வெளியில் மோடி பிரதமராக பதவி ஏற்கிறார்.

நேற்று மாலை மோடி குஜராத் மாநிலம் புறப்பட்டுச் சென்றார். ஆமதாபாத்தில் தனது சொந்த சட்டசபை தொகுதியான மணிநகரில் நடந்த பாராட்டுக் கூட்டத்தில் பேசி குஜராத் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அவரை வழியனுப்புவதற்கான குஜராத் சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று காலை காந்தி நகரில் கூடியது. இதில் நரேந்திரமோடி முதலமைச்சராக கலந்து கொண்டார்.

பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்காக அவரை குஜராத் சட்டசபை சபாநாயகர், அனைத்து கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து பேசினார்கள்.

பாராட்டுக்கு நன்றி தெரிவித்து மோடி உணர்ச்சிகரமான உரையாற்றினார். தனக்கு ஒத்துழைப்பு தந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், குஜராத் மாநில மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உருக்கமாக பேசினார்.
அவர் பேசியதாவது:–

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது. குஜராத்தை முன் மாதிரியாக கொண்டு தேர்தலை சந்தித்ததால்தான் இந்த வெற்றியை பெற முடிந்தது.


இதில் மேலும் படிக்கவும் :