1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2024 (14:33 IST)

40 ஆண்டு அரசியல் வாழ்வில் மோடியை போல் ஒரு சரியான தலைவரை பார்த்ததில்லை: சந்திரபாபு நாயுடு

Chandrababu Naidu
எனது 40 ஆண்டு அரசியல் அனுபவத்தில் மோடியை போல் இந்தியாவில் ஒரு சரியான தலைவரை பார்த்ததில்லை என்று ஆந்திர முதல்வராக பதவி ஏற்க இருக்கும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 
 
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளாக பல சிறந்த திட்டங்களை செயல்படுத்தி உள்ளது என்றும் நாடு குறிப்பிட்ட தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். 
 
நான் 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், பல அரசியல் தலைவரை பார்த்திருக்கிறேன், அவர்களில் உலக அளவில் இந்தியாவை சிறந்த நாடாக நிலை நிறுத்திய பெருமை பிரதமர் மோடியை மட்டுமே சேரும் என்று அவர் தெரிவித்தார். 
 
இந்தியாவுக்கு சரியான நேரத்தில் சரியான தலைவர் கிடைத்திருக்கிறார் என்று சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran