மோடி துறவியாவதை தடுத்த ஆத்மஸ்தானந்தா காலமானார்....
ராமகிருஷ்ணா மடத்தின் தலைமையாக செயல்பட்டவரும், சுவாமிஜி என அழைக்கப்பட்டவருமான ஆத்மஸ்தானந்த மஹராஜ் நேற்று காலமானார்.
பேலூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் தலைமையாக அவர் செயல்பட்டு வந்தார். அவருக்கு வயது 98. முதுமை காரணமகா அவர் பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார். இவர் சிறுவயதாக இருந்த போதே ராமகிருஷ்ண மடத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் ஆவார்.
1966ம் ஆண்டு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு வந்த போது, அவரை சந்தித்த பிரதமர் மோடி, தானும் துறவியாக விரும்புவதாக தெரிவித்தார். ஆனால், அவரிடம் சிறிது நேரம் செலவழித்த சுவாமிஜி, உனக்கு துறவு வேண்டாம். உனக்கு வேறு பணிகள் காத்திருக்கிறது. நீ தனித்திருக்க வேண்டியவன் இல்லை. மக்களோடு மக்களாக இருக்க வேண்டியவன் எனக்குறி மோடி துறவியாவதை தடுத்து திருப்பி அனுப்பியவர் ஆவார்.
அவரின் மரணம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மோடி “ சுவாமிஜியின் இழப்பு தனிப்பட்ட முறையில் எனக்கு பெரிய இழப்பு. என் வாழ்வின் முக்கியமான தருணங்களில் நான் அவருடன் இருந்திருக்கிறேன். அவர் அறிவாற்றல் மிக்கவர். அவரின் நினைவை தலைமுறைகள் நினைவில் வைத்துக்கொள்ளும்” என குறிப்பிட்டுள்ளார்.