முன்பு ஒரு முறை திரை உலகைச் சேர்ந்த சிலர் தன்னை மிரட்டுவதாக நடிகர் சிவகார்த்திகேயன் மேடையில் அழுதார். அதைப் போலத்தான் இந்த தேசத்தின் பிரதமரும் கோவாவில் கருப்பு பணம் மீட்பு தொடர்பாக தமக்கு எதிராக சதி நடைப் பெறுவதாக பேசி மேடையில் கண் கலங்கினார்.
புதிய மீட்பர்
பிரதமரே! உங்களை கருப்பு பணத்தை மீட்பதற்கு தான் தேர்தெடுந்தோம். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதை நீங்கள் கார்பரேட்களிடம் இருந்தும், பணமா, சுவிஸ் வங்கிகளில் இருந்தும் மீட்க வேண்டுமே தவிர. அதை நீங்கள் அஞ்சறைப் பெட்டியில் இருந்து மீட்கக்கூடாது.
யாரை யார் கொல்வது
உங்களை உயிருடன் எரித்து கொன்றாலும் நேர்மை தவற மாட்டேன் என்டீறிர்கள். நேர்மை தவறாதீர்கள் அது பதவிக்கு அழகல்ல. ஆனால் நாங்கள் தான் வெயிலில் எரித்து கொண்டு இருக்கிறோம், வரிசையில் நின்று கொண்டு இருக்கிறோம், சில ஆயிரம்களுக்கு. சரியான புரிதல்கள் இல்லாமல் இன்னும் சிலர் தற்கொலை செய்து கொண்டார்கள். அதற்கு உங்களின் பதிலென்ன? யாருக்கு கருப்பு மை இட நினைக்கிறீர்கள். உங்களை அசுர பலத்துடன் ஆட்சியில் அமர்த்திய நடுத்தர வர்க்கதையா?
நேர் வழி தவறேல்
கற்பு நெறியை நிரூபிக்க சீதை தீ குளித்தார் என இதிகாசங்கள் கூறுகின்றன. எங்களின் நேர்மையை மை வைத்து நிரூபிக்க சொல்லும் பிரதமரே! இந்த தேசத்தின் அம்பானி, அதானிகளின் கணக்குகளையும் நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் நடந்த 50 லட்சத்திற்கான பண பரிவர்தனைகள் அனைத்தையும் மக்கள் மன்றத்தின் முன் வைத்து இந்த அரசின் கற்பு நெறியை நிரூபிக்க நீங்கள் தயாரா? அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் மை இட இந்த அரசு தயாரா? நாங்களும் மை இட்டு எங்களின் தூய்மையை நிரூபிக்க தயாராக இருக்கிறோம்.
நீங்களும் நிம்மதியாக தூக்கலாம்
ஏழைகள் நிம்மதியாக தூக்குகிறார்கள், பதுக்கல்காரர்கள் எல்லாம் தூக்க முடியவில்லை என்று சொல்லுகிறீர்கள். சில ஆயிரம்களுக்காக நாங்கள் தான் வரிசையில் நிற்கிறோம். பதுக்கல்காரர்கள் க்வாலா பேர்வழிகளிடம் பேரம் பேசி கொண்டிருகிறார்கள். யாரை ஏமாற்றும் வேலை, ஒரு நாள் வந்து வங்கிகளில் வந்து வரிசையில் நின்று பாருங்கள்.. நீங்களும் நிம்மதியாக தூக்கலாம். உங்களுக்கும் மை மூலம் நேர்மைக்கும் சான்று வழங்கப்படும்.
வருத்தங்கள் தேவை இல்லை
சிரமங்களுக்கு வருதுகிறேன், தலை வணங்குகிறேன் என்ற கதை எல்லாம் வேண்டாம். வருத்தங்கள் வேண்டாம் இது வரை ATM, பாங்க் வாயில்கள் நடந்த மரணத்திற்கு பதில் சொல்லுங்கள் !
யாரிடம் யார் அழ
இயக்குனர் கெளதம் வாசு தேவ மேனன், நடிகர் சிவ கார்த்திகேயன் போல எனக்கு அழ தெரியாது என்று சொன்னது போல, சாமானியனுக்கு உங்களுக்கு ஓட்டு போட்டதை நினைத்து அழ தெரியாது!
வைகை புயலும் பிரதமரும்
50 நாட்கள் அல்ல, 500 நாட்கள் ஆனாலும் முடியாது. இந்த திட்டம் தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் போல சிறப்பான திட்டம் அல்ல. பிறகு என் எந்த ஆர்ப்பாட்டம்? இந்த திட்டம் கருப்பு பணம் மீட்கும் திட்டம் அல்ல, சில கோடிகள் கள்ள பணத்தை ஒழிக்கும் திட்டம். வைகை புயல் வடிவேல் தலை நகரம் படத்தில் சொல்லுவது போல, நானும் ரௌடி தான்: நான் ஜெயிலுக்கு போறேன் என்பதை போல... நானும் பிரதமர் தான், நானும் கருப்பு பணத்தை மீட்க போறேன் என்று புறப்பட்டு இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்.