1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 25 ஜூன் 2016 (16:21 IST)

டெல்லியில் அவசரநிலையை பிரகடனம் செய்த மோடி: கேஜ்ரிவால் காட்டம்

டெல்லியில், பெண் ஒருவரை தாக்கிய புகாரில், ஆம் ஆத்மி எம்எல்ஏ தினேஷ் மொகானியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.


 
 
டெல்லி சங்கம் விகார் தொகுதி எம்.எல்.ஏ தினேஷ் மொகானியிடம் குடிநீர் வினியோகம் சரியில்லை என்று பெண் ஒருவர் புகார் மனு கொடுக்க வந்தார். அப்போது எம்.எல்.ஏ.வுக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த பெண் வெளியே தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து அந்த பெண் எம்.எல்.ஏ. தன்னை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து எம்.எல்.ஏ. தினேஷ் மொகானியா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார்.
 
அப்போது அங்கு வந்த காவல் துறையினர் செய்தியாளர்கள் சந்திப்பை தடுத்து, அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் தினேஷ் மொகானியாவை கைது செய்தனர்.
 
இந்த சம்பவத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் இது குறித்து கூறிய அவர் பிரதமர் மோடி டெல்லியில் அவசரநிலையை பிரகடனப்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை கைது செய்கிறார் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.