செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (17:13 IST)

5 நாட்களுக்கு மணிப்பூரில் இன்டர்நெட் இணைப்பு கட்.. அதிரடி உத்தரவு..!

மணிப்பூரில் நாளுக்கு நாள் போராட்டம் மற்றும் வன்முறை அதிகரித்து வரும் நிலையில் 5 நாட்களுக்கு இன்டர்நெட் கட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் இந்த மோதல் வன்முறையாக மாறி பெரும் உயிர் இழப்புகளும் ஏற்பட்டன. இதையடுத்து மத்திய பாதுகாப்பு படையினர் மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது மீண்டும் மணிப்பூர் மாநிலம் பற்றி எரிவதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் மணிப்பூரில் நடக்கும் வன்முறை செய்திகள் இணையத்தின் மூலம் பரவி வருவதாகவும் சில செய்திகள் மிகைப்படுத்தப்பட்டு வதந்திகளாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து மணிப்பூரில் ஐந்து நாட்கள் இன்டர்நெட் கட் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. மொபைல் நெட், பிராட் பேண்ட், விபிஎன் என அனைத்து விதமான இன்டர்நெட் மணிப்பூரில் ஐந்து நாட்களுக்கு இணைப்பு இருக்காது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Edited by Siva