பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த எம்.எல்.ஏ!!
மிசோரம் மாநிலத்தில் சாய்ஹா பகுதி எம்.எல்.ஏ பெய்ச்சுவா, 2௦ வருட மருத்துவ சேவைக்குப் பின் அரசியல் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார்.
மிசோரம் தேசிய முன்னணிக் கட்சியில் இணைந்து எம்.எல்.ஏ ஆனார். மிகச்சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரான பெய்ச்சுவா இக்கட்டான சூழ்நிலை காரணமாக தனது தொகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதுவரை 100-க்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சைகளை நான் செய்திருந்தாலும், அரசியலுக்கு வந்தபின்னர் எந்த அறுவை சிகிச்சையும் செய்யவில்லை. அதனால் இது எனக்கு மறக்க முடியாத ஒன்று என கூறினார்.
அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டற்கு பின்னர் தற்போது அந்தப் பெண் நலமாக இருக்கிறார்.