1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Updated : வெள்ளி, 23 அக்டோபர் 2015 (13:09 IST)

பா.ஜ.க. தலைவர்கள் எச்சரிக்கையுடன் கருத்து கூற வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

உத்திரப்பிரதேசத்தில் தலித் குழந்தைகள் கொலை செய்யப்பட்டது குறித்து வி.கே.சிங்கின் விமர்சனம் சர்சைக்குள்ளாகிய நிலையில், பா.ஜ.க. தலைவர்கள் எச்சரிக்கையுடன் கருத்துக்களை  தெரிவிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார்.


 
 
ஹரியானாவில் இரு வேறு ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த 2 குழந்தைகள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
 
இவ்விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வி.கே. சிங், நாயின் மீது யாரேனும் கல்லெறிந்தால், அதற்கும் மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டுமா? என பதில் அளித்தார்.
 
மத்திய அமைச்சர் வி.கே.சிங்கின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தனது பேச்சுக்கு வி.கே. சிங் மன்னிப்பு கோரியுள்ளார்.
 
இந்நிலையில் உற்று நோக்கப்படும் விவகாரத்தில் பா.ஜ.க.வினர் எச்சரிக்கையுடன் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று  மத்திய அமைச்சர்களுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், "நாம் கூறும் கருத்துக்கள் தவறாக சித்தரிக்கப்படும் போது அதில் இருந்து நாம் விலகியிருக்க முடியாது. எனவே எச்சரிக்கையுடன் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்". இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.