1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 23 நவம்பர் 2016 (16:15 IST)

மோடியை பாராட்டி பேசியதால் பிடுங்கப்பட்ட மைக் - வீடியோ

பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒருவர், பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியதால், அவரிடம் இருந்த மைக், மேடையிலேயே வலுக்கட்டாயமாக பிடிங்கப்பட்டது. 


 

 
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்தார்.
 
இதற்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயவதியும் ஒருவர். இந்நிலையில், அக்கட்சி சார்பாக, உத்தரபிரதேசத்தில் ஒரு பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
 
அப்போது, அக்கட்சியை சேர்ந்த ஒருவர் பிரதம் மோடியை மிகவும் புகழ்ந்து பேசினார். தீவிரவாதிகளை ஒழிக்க இந்தியா நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக் மற்றும் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்காகவும் மோடியை புகழ்ந்து தள்ளினார்.
 
இது மேடையில் இருந்த அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அவர் கையில் இருந்த மைக்கை ஒருவர் பிடுங்க முயற்சித்தார். ஆனாலும், அவர் விடாமல் பேசிக் கொண்டே இருந்தார். ஒருவழியாக மைக் அவரிடமிருந்து பிடுங்கப்பட்டது. 
 
அந்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.